Breaking News

செல்போன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

அட்மின் மீடியா
0
தலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு தூங்கிய இளைஞர், செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.

ஒடிஷா மாநிலம் , நயகார் மாவட்டத்தில் உள்ள ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குணா பிரதான் (22). இவர்  கோயில் கட்டுமானப் பணியில் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார்.

குணா பிரதான்,  பாராதிப் நகரில் உள்ள தனது அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறங்குவதற்கு முன்பு  தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.





அப்போது, மின்சாரத்தால் அதிக சூடான செல்போன், வெடித்து சிதறியது. செல்போனுக்கு அருகிலேயே குனா தலையை வைத்து தூங்கியதால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்த நாள் காலை 5 மணிக்கு குனாவை கண்ட சக தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback