வைரலான ஹெச்டிஎப்சி வங்கி பாஸ்புத்தகம் : விளக்கம் அளித்த வங்கி
அட்மின் மீடியா
0
இன்று ஹெச்டிஎப்சி வங்கியின் பாஸ்புக் ஒன்று சமூக வலைத்தளங்களில்
பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த புத்தகத்தில் இந்த வங்கியின் டெபாசிட்டுகள் அனைத்தும் Deposit Insurance and
Credit Guarantee Corporation நிறுவனத்தின்
இன்சூரன்சில் உள்ளன. வங்கியில்
ஏதேனும் நிதிச்சிக்கல் ஏற்பட்டால், அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் DICGC நிறுவனம்தான் காப்பீட்டுத்தொகை வழங்கும். நிதிச்சிக்கல் ஏற்பட்டதிலிருந்து 2 மாத காலத்துக்குள் ஒவ்வொரு
டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் காப்பீட்டுத்தொகை
வழங்கப்படும். என்று ஆங்கிலத்தில் ரப்பர் ஸ்டாப் முத்திரை
இடபட்டுள்ளது
இந்த நிலையில்தான், ஹெச்டிஎப்சி
வங்கி இது தொடர்பாக விளக்கம்
அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ரிசர்வ்
வங்கி ஜூலை 22, 2017 அன்று ஒரு சுற்றறிக்கை
வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கையில், அனைத்து
வங்கிகளும், நிதி வழங்கும் அமைப்புகளும்,
வாடிக்கையாளர் பாஸ்புக்கில், டெபாசிட்டுக்கான இன்சூரன்ஸ் தொகை குறித்த தகவலை
வாடிக்கையாளர் அறியும் வகையில் பதிவு
செய்து தர வேண்டும் என்று
கூறப்பட்டிருந்தது. DICGIC
விதிகளின் கீழ் அனைத்து வங்கிகளுக்கும்
இது, பொருந்தும். பிரிண்ட் தகவல் செய்யாத பாஸ்புக்கில்,
முத்திரைகுத்தி, இந்த விவரங்களை வழங்குகிறோம்.
இதில் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு ஹெச்டிஎப்சி வங்கி
தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது
Tags: முக்கிய செய்தி