Breaking News

தேள் கடித்தால் இதய நோய் வராதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்து விட்டால், அவருக்கு அறுவை சிகிச்சையோ , ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை . தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது . அதே போல் தேனீ கொட்டியவர்களுக்கு இரத்த கொதிப்பு வராது செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது
சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. 

இவைகளின் விஷம் தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது .என பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது 




அப்படியானால் உண்மை என்ன?

மேலே உள்ள அனைத்தும் பொய்யானது. யாரும் நம்பவேண்டும் எதற்க்கும் ஆதாரம் இல்லை. ஆனால் இந்த கட்டுகதை இனையத்தில் நிரம்பி வழிகின்றது. பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றார்கள்

ஆனால் அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி ஆகும்
யாரும் நம்பவேண்டாம்


ஆனால் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க்  தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத்தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்று கூறியுள்ளார் அதுவும் 2010 ம் ஆண்டு

ஆனால் அதன் அதனை இன்னும் யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை.

ஆதாரம்


https://www.bhf.org.uk/informationsupport/heart-matters-magazine/my-story/big-interview/peter-weissberg

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback