Breaking News

ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய உரிமையாளர் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

அட்மின் மீடியா
0
ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய உரிமையாளர் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை புதுப்பேட்டைப் பகுதியில், ஆயுதப்படை காவலர் சரவணன் என்பவர், அப்பகுதியிலிருந்த தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு சாப்பிட சென்றுள்ளார். 

அங்கு 2 கல் தோசைகளை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார். 

அப்போது, வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை காவலர் சரவணன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு உணவுகளை ஏன் வழங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளரும், அங்கு இருந்தவர்களும் முறையான பதிலேதும் அளிக்காமல், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளனர். 

இதனை ஆயுதப்படை காவலர் சரவணன் தனது மொபையில் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில்சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள்  நேற்று அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.

 இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்ததோடு கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னையில் இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையோ, நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

Give Us Your Feedback