இன்னும் 30 ஆண்டுகளில் கேரளா மும்பை கடலில் முழ்கும்- அமெரிக்க ஆய்வு மையம் தகவல்
அட்மின் மீடியா
0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கடல் மட்டம் உயர்வது குறித்து ஆய்வு மேற்கொண்டது. பொதுவாக இதுபோன்ற ஆய்வுகள் சாட்டிலைட் புகைப்படத்தை கொண்டு தான் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த நிறுவனம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கடல் பகுதியையும் ஆய்வு செய்தது. இதன்மூலம், கடல்மட்டம் உயர்வதை துல்லியமாக கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் உலகில் 15 லட்சம் மக்கள் கடல் மட்டத்தை விட குறைவான உயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பகுதி இன்னும் 30 ஆண்டுகளில் மொத்தமாக மூழ்கிவிடும். அதேபோல் தெற்கு வியட்நாம் மொத்தமாக கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள 2 லட்சம் மக்கள் இடமாறும் சூழ்நிலை உருவாகும்.
அரபிக்கடல் நினைத்ததைவிட அதிகமாக நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது. 2050ல் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் கடலில் மூழ்கி விடும்.
இன்னும் சில வருடங்களில் இதன் பாதிப்பு தெரிய தொடங்கும். அதேபோல், கேரளா மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகும். என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்
https://climatecentral.org/news/report-flooded-future-global-vulnerability-to-sea-level-rise-worse-than-previously-understood

Tags: முக்கிய செய்தி