ஒரே நாடு ஒரே அடையாள அட்டை விரைவில் : அமித் ஷா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
- ஆதார் கார்டு
- ஓட்டுநர் உரிமம்,
- வங்கி கணக்கு அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா இன்று டெல்லியில் நடந்தது. கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றி பேசிய அவர், 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் பேப்பருக்குப் பதிலாக மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.
மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தனது பேச்சில் அமித்ஷா குறிப்பிட்டார்