கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கபட உள்ளதா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் ஒர் வதந்தி செய்தி
புதிதாக மாற்றியமைத்து அமைக்கப்பட உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும்
அதன் பிரிவுகள்.
டெல்டா மாவட்டங்களை மாற்றியமைத்து, கும்பகோணம் தலைமையில் பாபநாசம்,
திருவிடைமருதூர்,வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகியவற்றை
உள்ளடக்கிய புதிய மாவட்டம் அமைய உள்ளதாகவும்,
அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக
சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.
என்று ஓர் புகைப்படத்தை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
இதுவரை அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை மேலும் இதுவரை இந்த செய்தி எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி