ஆசிபா கற்பழித்து கொன்ற அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
அட்மின் மீடியா
0
ஆசிபா சிறுமி பலாத்கார
படுகொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8
வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி காணாமல் போனார். ஒருவாரம் கழித்து
சிதைந்த நிலையில் அவரது சடலம்தான் கிடைத்தது.
சிறுமியை கதுவா காட்டுப்பகுதியில் இருந்து கடத்திச்
சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம்
செய்துள்ளனர்.
அச்சிறுமிக்கு நினைவே திரும்பாத வகையில் மயக்க மருந்து கொடுத்து
பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கொடூரமாக
பலாத்காரம் செய்தததே அச்சமூகத்தினரை அச்சுறுத்துவதற்கு என வாக்குமூலமும் கொடுத்தனர். Iஇது சம்மந்தமாக 7 பேர் கைது செய்யபட்டனர்.
உச்சநீதிமன்றத்துக்கு சென்ற இவ்வழக்கு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்துக்கு சென்ற இவ்வழக்கு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி முதல் பதான்கோட்
நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. நாட்டை கொந்தளிக்க
வைத்த இவ்வழக்கில் இன்று பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ்
6 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
6 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஷால் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முதன்மை குற்றவாளிகளான சஞ்சிராம், பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.