சென்னை புறநகர் புதிய ரயில்கள் அட்டவனை
அட்மின் மீடியா
0
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், சென்னை புறநகர் ரயில் சேவை பிரிவில், 7 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த ரயில்கள் சேவை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அதன்விவரம்:
சென்னை-அரக்கோணம் பிரிவு: இந்த பிரிவில் ஒரு ரயில் புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அரக்கோணம் சந்திப்பில் இருந்து காலை 5.30 மணிக்கு புதிய ரயில் புறப்பட்டு, காலை 7.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகத்தை வந்து அடையும்.
சென்னை-கும்மிடிப்பூண்டி பிரிவு:
இந்தப் பிரிவில் இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புதிய ரயில் புறப்பட்டு, மூர்மார்க்கெட் வளாகத்தை காலை 7.20 மணிக்கு அடையும்.
மறுமார்க்கமாக, இந்தப் புதிய ரயில் மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு சூலூர்பேட்டையை இரவு 11.35 மணிக்கு சென்றடையும்.
ஆவடி குறுக்கு பிரிவு சேவைக்கு 2 புதிய ரயில்கள்:
ஆவடியில் இருந்து மாலை 5 மணிக்கு புதிய மின்சார ரயில் புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
வேளச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு சென்னை கடற்கரையை இரவு 7.30 மணிக்கு அடையும்.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவு:
இந்தப் பிரிவில் இரண்டு புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புதிய ரயில் புறப்பட்டு செங்கல்பட்டை மாலை 5.35-க்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, புதிய ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7.39 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
இந்த புதிய ரயில்கள் சேவை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.