காவி கலர் உடையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி ஷர்ட்
அட்மின் மீடியா
0
உலககோப்பையில் வரும் ஞாயிறன்று இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாட உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நீலநிற உடை அணிந்து விளையாடி வந்துள்ளன. வரும் ஞாயிறன்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளன.
சர்வதேச போட்டிகளில் மோதும் இரு அணிகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விளையாட கூடாது என்பது ஐசிசியின் விதிகளுள் ஒன்றாகும்.
இதனையடுத்து ஏதேனும் ஒரு அணி புதிய ஆடையை அணிந்து களமிறங்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில் இங்கிலாந்து போட்டியை நடத்தும் நாடு என்பதால் உடையை மாற்ற முடியாது. எனவே இந்திய அணி தனது ஆடையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியஅணி புதிய உடையை தேர்வு செய்த நிலையில்அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.