இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம்.. ஒப்புதல் அளித்தது சவுதி
அட்மின் மீடியா
0
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக
30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம்.. ஒப்புதல் அளித்தது சவுதி
இந்தியாவில் இருந்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை
2 லட்சமாக உயர்த்த, சவுதி அரேபிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் மூலம் மெக்கா புனித பயணம் செல்லும் இந்தியர்களின்
எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 30,000 கூடுதலாக உயர்ந்துள்ளது.
ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும்
சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம். இது முஸ்லிம்களின்
ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது
இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள
பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது
குறித்து ஆலோசித்தார்.
இந்தியா - சவுதி தரப்பு பேச்சு குறித்து செய்தியாளர்களிடம்
பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விஜய் கோகலை, தற்போது நாடு
முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிக்க பிரதமர் மோடி, சவுதிஅரேபிய இளவரசரிடம் கோரிக்கை
விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட சவுதி இளவரசர்,
கூடுதலாக 30 ஆயிரம் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் புனித யாத்திரை வர அனுமதி அளிக்கப்படும்
என உறுதி கூறியுள்ளார்.