Breaking News

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்க வாய்ப்பு

அட்மின் மீடியா
0
இன்று வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்க வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கும் அந்தந்த மாநில சட்டசபைக்கும், தேர்தல் நடத்தப்பட்டு நாளை அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரும் இடங்களில் பாதுகாப்பு அந்தந்த மாநில காவல் துறை உறுதி செய்து வருகிறது.


இந்த நிலையில் மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் காவல் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.


அதில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாளை பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Give Us Your Feedback