Breaking News

தண்ணீரை வீணாக்காதீர்கள்

அட்மின் மீடியா
0
தண்ணீரை வீணாக்காதீர்கள்
ஒரு குடம் தண்ணீருக்கான நிலையை பாரீர் நாளை நம் ஊருக்கும் இதே நிலை வரலாம்

வெற்றுக் குடங்களுடனும் வேதனைப் புலம்பலுடனும் நின்று தண்ணீர் என்றால் வந்திடுமா.?

விடுபட்ட உரிமையும் வெட்டிய மரங்களும் கத்தினால் கதறினால் முளைத்திடுமா.?

சத்தியமாகத் திறக்கமாட்டார்கள்
மனக் கதவையும் அணைக் கதவையும்

தண்ணீர் கரைத்தொடும் முன் 

நம் வாழ்வில் கண்ணீர் தரை தொட்டு விடும்.

தண்ணீரை சேமிக்க முடியாத நாம்

கண்ணீரை சேமித்து வாழ போகிறோம் 

தண்ணீர் தண்ணீர் என்று கண்ணீர் சிந்தும் நாட்கள் வெகு தூரமில்லை😢


இந்த வீடியோவை பார்த்தாலே கண்கள் கலங்குகிறது தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் தவிப்பு.

மக்களாகிய நாம் வாய்விட்டு கேட்டு விடுகிறோம் வாயில்லாத ஜீவராசிகள் என்ன செய்யும. அது என்ன வாய்திறந்து மனிதர்களிடம் கேட்கவா முடியும்..??

நாட்டில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் வாயில்லாத ஜீவராசிகளும் தவிக்கிறது.

எனவே தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே.

தண்ணீரை வீன் விரயம் செய்கிறவர்கலுக்கு இந்த கானொளியை அட்மின் மீடியாவின் மூலமாக சமர்பணம் செய்கின்றோம்.

தண்ணீர் தண்ணீர் என்று கண்ணீர் சிந்தும் நாட்கள் வெகு தூரமில்லை






Give Us Your Feedback