தேர்தல் பிரச்சாரம் ஓய்வு
அட்மின் மீடியா
0
இன்று முதல் 16ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 6:00 மணிக்கு பின் எவ்வித பிரசாரத்திலும் அரசியல் கட்சியினர் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
எனவே ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரசாரம் நிறைவடைகிறது.
அதாவது 16ம் தேதி மாலை 6:00 மணியுடன் பொதுக்கூட்டங்கள் பேரணிகள் வழியாக 'டிவி' போன்ற சாதனங்கள் வழியாக பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பிரசாரம் நிறைவடைந்த பின் யாரும் பொதுக்கூட்டம் பேரணி போன்றவற்றை நடத்தவோ பங்கு பெறவோ உரையாற்றவோ கூடாது.
திரைப்படங்கள் 'டிவி' மற்றும் ஊடகங்கள் வழியாகவும் தேர்தல் குறித்து காட்சிப்படுத்துதல் கூடாது.
அதேபோல் 48 மணி நேரத்திற்கு முன் பொது மக்களை கவரும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க நிகழ்ச்சிகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
இவற்றை மீறும் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.
மேலும் சான்றளிப்பு பெறாத விளம்பரங்களை ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில் நாளிதழ்களில் வெளியிடக் கூடாது. பிரசாரம் நிறைவடைந்த பின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பேட்டியை தவிர்க்க வேண்டும்.
'டிவி'க்களில் 16ம் தேதி மாலை வரை மட்டுமே விளம்பரங்கள் ஒளிபரப்பலாம். அதுவும் சான்று பெற்ற விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்பலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.