Breaking News

ஈராக்கில் வாழும் இஸ்லாமியர்களின் கடவுள் முருகனா?

அட்மின் மீடியா
0

ஈராக்கில் வாழும் யாசித்தின் இஸ்லாமியர்கள் இவர்களுக்கு கடவுள் முருகன் என்றும் இவர்கள் மயிலை வழிபடுகின்றார்கள் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகின்றது இதன் உண்மை என்ன

அதன் வீடியோ உங்களுக்காக

 

யசீதி மக்கள் என்றால் யார் ?

அவர்கள் இஸ்லாமியர்களா ?

அவர்கள் ஈராக் நாட்டில் வசிக்கின்றார்களா?

யசீதி மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்கள் குர்தி மொழி பேசுகின்ற ஓர் இனச்சமயக் பழங்கிடியின குழுவினர் ஆவர். 

யசீதி இனம் என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யசீதி  மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். 

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது. என்றும் . இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். என்று நம்புகின்றார்கள். மயில் தேவதையை குத்துவிளக்கில் பொறித்து வைத்துஅதனை வணங்கிகின்றார்கள்.

இவர்கள் மதத்திலும் கிருத்தவர்களுக்கு இருப்பதைப் போல ஞானஸ்தானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போலவும் யூதர்களைப் போலவும் சுன்னத் உண்டு. ஜெராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடும் உண்டு. 11 ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இம்மதத்தை உருவாக்கினார், இந்த யசீதி மக்கள் மதம் யூத மதம், இஸ்லாமிய மதம், கிருத்தவ மதம், ஜெராஸ்டிர மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது

யசீதி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் என்று எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன 

 ஆதாரம் மற்றும் மேலும் தகவலுக்கு

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback