Breaking News

மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

அட்மின் மீடியா
0

மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்



தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தவெக மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் ஒரத்தநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழா மேடையில் விஜயின் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback