Breaking News

4,000 கிலோ மீட்டர் ஏவுகணை ஏவி மொத்த உலக நாடுகளையும் கதறவிட்ட ஈரான் முழு விவரம்

அட்மின் மீடியா
0
4,000 கிலோ மீட்டர் ஏவுகணை ஏவி மொத்த உலக நாடுகளையும் கதறவிட்ட ஈரான் முழு விவரம்



4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஏவி, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் தாக்க முயன்றதால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் அச்சம்.2,000 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் உள்ளது என நினைத்த மேற்கு உலக நாடுகளை ஈரான் மிரளவிட்டுள்ளது.

மேற்காசியப் போரில் ஈரான் தனது ராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு நிரூபிக்கும் வகையில், சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை ஈரானிடம் அதிகபட்சமாக 2,000 கி.மீ. தொலைவு வரை பாயும் ஏவுகணைகளே இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதல் அந்த மதிப்பீடுகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளம் (டியாகோ கார்சியா) ஈரானில் இருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் ஏவியது. ஒரு ஏவுகணை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தோல்வியடைந்தது. மற்றொரு ஏவுகணை அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானில் இடைமறிக்கப்பட்டது. ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சி உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback