Breaking News

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி வைரலாகும் வீடியோ blue colour egg karnataka

அட்மின் மீடியா
0

இந்தியாவில் ஒரு கோழி நீல நிற முட்டையை இட்டுள்ளது, இது உள்ளூர்வாசிகள் மற்றும் கால்நடை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு அசாதாரண நிகழ்வு. கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சையத் நூருக்குச் சொந்தமான இந்தப் பறவை, பொதுவாக வெள்ளை முட்டைகளை உற்பத்தி செய்யும்.



கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான ஒரு கோழி,  திடீரென நீல நிறத்தில் முட்டை ஒன்றை இட்டுள்ளது

இது பற்றிச் சையத் நூர் கூறுகையில்:-

என்னிடமிருந்த 10 கோழிகளுக்கும் ஒரே உணவைத்தான் கொடுத்தேன். மற்ற கோழிகள் வெள்ளை அல்லது மஞ்சள் நிற முட்டைகளை இடுகின்றன. ஆனால், இந்தக் கோழி மட்டும் முதன்முறையாக நீல நிற முட்டையை இட்டது அந்தக் கோழி தினமும் வெள்ளை நிற முட்டைகளை இட்டு வந்தது. திடீரென ஒருநாள் அது நீல நிற முட்டையிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன் எனக் கூறியுள்ளார்



காரணம் என்ன:-

கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவெர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டையின் வெளிப்புற அடுக்கு நீல நிறமாக மாறும். சில சமயங்களில் மரபணுப் பிரச்சனை காரணமாகவும் இப்படி நிகழும். சாப்பிடும் உணவில் பிரச்சனை இருந்தாலும் இப்படி நிகழ வாய்ப்பு உள்ளது" என்று  ஆராய்சியாளர்கள் கூறுகின்றார்கள்

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்;-

https://x.com/TheFederal_News/status/1960923108568662466

A hen in India has laid a blue egg, an unusual event that has drawn the attention of locals and veterinary experts alike. The bird, owned by Syed Noor, a farmer in the Davanagere district of Karnataka, typically produced white eggs.

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback