தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு 161 பேர் விடுதலை நடந்தது என்ன முழு விவரம்
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு 161 பேர் விடுதலை முழு விவரம்
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மாயமானார். இதுதொடர்பாகப் பழனி கொடுத்த புகாரின் பேரில் ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரைப் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்காக அழைத்துச்சென்றார்.விசாரணையின்போது, ஷமீர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினா்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனா். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவா் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
அப்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷமீல்அகமது சிகிச்சை பலனின்றி ஜூன் 26-ந் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஷமில் அகமது மரணத்துக்குக் காரணமான காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் மீது கொலை வழக்குப்பதிந்து, கைது செய்ய வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ஊா்வலமாக சென்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டம் கலவரமாக மாறியது, காவல் துறை வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், லாரிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 191 பேர்மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேலூர், கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைத்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாகத் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் ஆம்பூர் கலவரம் தொடர்பாகப் பதிவான வழக்குகளிலிருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாகப் பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்