Breaking News

இனி ஒரே நாளில் தொழில் உரிமம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை

அட்மின் மீடியா
0

இனி ஒரே நாளில் தொழில் உரிமம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை

நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம்

நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு உணவு விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும்



தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சிக்கு அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். விதி 290ன்படி புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும். 

இதன்படி, வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் சிறு வணிகர்களுக்கு எளிதாக தொழில் உரிமம் கிடைக்கும் வகையில் விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 500 சதுடி அடிக்கு குறைவாக உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கப்படும். உணவு பொருட்கள் சார்ந்த கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சிறு வணிகர்கள் மிகவும் பயன்பெறுவார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback