கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்த தடை
அட்மின் மீடியா
0
கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்த தடை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்
கிராம நிருவாகம் கிராம உதவியாளர்களை கிராம நிருவாக பணியினை தவிர இதர பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதை தடுத்திட சங்கங்கள் கோரிக்கை அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.
2. வருவாய்த்துறை சங்களின் கூட்டமைப்பு (FEDRA) மனு நாள். 18.11.2024
3. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மனு நாள்.02.01.2025.
பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2) பார்வை 2-ல் காணும் மனுவில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை 4 -ல், கிராமத்தில் இருந்து வெளியில் பணியாற்றும் மாற்றுப்பணி நியமனங்களை அதாவது கிராமப் பணி அல்லாத அலுவலகப்பணிகள், ஆய்வு மாளிகை, புத்தக திருவிழா போன்ற பிறதுறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
3) மேலும், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம் தனது 02.01.2025 நாளிட்ட மனுவில், தீர்மானம் எண் 5-ல் வருவாய் நிருவாகஆணையர் அவர்கள் கிராம உதவியாளர்களை கிராம பணியை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் கிராம பணியை தவிர மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று கீழ்நிலை அலுவலர்களுக்கு வழிகாட்டியும் அந்த உத்தரவை நடைமுறைபடுத்தாமல் தொடர்ந்து கிராம உதவியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பணிகளுக்கு பயன்படுத்திவரும் போக்கு சரியானது இல்லை எனவும், கிராம உதவியாளர்களின் பணி தன்மையை வெளியிடவேண்டும் என கோரியுள்ளது.
4) இந்நேர்வில், மேற்காணும் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக, கிராம உதவியாளர்களை கிராம நிர்வாகப் பணிக்கு தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்ப்பது தொடர்பாக இவ்வலுவலக வ.நி 2(2)/35730/2020, நாள் 14.12.2021 கடிதத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிட மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பெற்றுக்கொண்டமைக்கான கேட்டுக்கொள்கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்