காரில் மது அருந்திவிட்டு தூங்கிய அண்ணன் - தம்பி மூச்சுத் திணறி உயிரிழப்பு!
காரில் மது அருந்திவிட்டு தூங்கிய அண்ணன் - தம்பி மூச்சுத் திணறி உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியை சேர்ந்தவர் திலீப்(25) . இவருடைய சகோதரர் வினய்(20). திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வினய் பணிபுரிந்து வருகிறார்.
திருச்சானூரை சேர்ந்த திலீப் மற்றும் வினய் ஆகிய இருவரும் காரில் ஏ.சி. போட்டு மது அருந்தியுள்ளனர். மேலும் தாங்கள் மது அருந்துவது யாருக்கும் தெரியக்கூடாது என கார் மீது தார்ப்பாயை போட்டுள்ளனர்.
மது அருந்திவிட்டு இருவரும் உறங்கிய நிலையில் காரில் ஏ.சி. நின்றுபோனதால் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்