தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சிவகங்கை திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் , காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் , காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் எனவும் டிஜிபி ஆணையிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்