Breaking News

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம்அறிவிப்பாணை வெளியீட்டது தமிழ்நாடு அரசு

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பங்களை சமர்பிக்க 17ம் தேதி கடைசி நாள்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பங்களை சமர்பிக்க 30ம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 -ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் و மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1/07/2025 முதல் 17/07/2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17/07/2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கான அறிவிக்கை-(Notification)
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள 274 ஊராட்சிகள், 5 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 1 மாவட்ட ஊராட்சியிலும், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்கீழ், மாற்று திறனாளி ஒருவரை நியமன உறுப்பினராக நியமனம் செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.07.2025 முதல் 30.07.2025 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், தகுதியான மாற்றுத் திறனாளி நபர்கள் பின்வரும் அலுவலர்களிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு : மனுக்கள் அலுவலகம் அளிக்க வேண்டிய
மாவட்ட ஊராட்சி செயலர், காஞ்சிபுரம் மாவட்டம்

ஒன்றிய உறுப்பினருக்கு மனுக்கள் அளிக்க வேண்டிய அலுவலகம்
வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்

கிராம ஊராட்சி மனுக்கள் அலுவலகம் உறுப்பினருக்கு அளிக்க வேண்டிய
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்

அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback