Breaking News

அரசு ஊழியர்கள் திருமண முன்பணம் ரூ.5 லட்சம் வழங்கப்படும் - தமிழக அரசு அரசானை

அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் பல மடங்கு  உயர்வு 

இனிமேல் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன்பணம் வழங்கப்படும் என அறிவிப்பு

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்க்ள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback