தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 37 பேர் பலி முழு விவரம்
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 34 பேர் பலி முழு விவரம்
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு.
தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது நேற்று நடந்த இந்த (விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை முதல் ஷிஃப்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியில் ஈடுபட்டு வந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் பத்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ற்றுவட்டார பகுதிகளில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் , விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீஸார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்