Breaking News

புக்கிங் ரத்து செய்தால் அபராதம், பீக் ஹவரில் 2 மடங்கு கட்டணம் - Ola, Uber க்கு மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

Ola, Uber போன்ற நிறுவனங்கள் Peak-Hours-ல் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, சாதாரண கட்டணத்தைவிட 1.5 முதல் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசரமில்லாத நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட 50 சதவீதம் குறைவாக வசூலிக்க வேண்டும் என்றும், காரணமின்றி ஒரு பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநருக்கும் பயணிக்கும் தலா ரூ. 100 மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கூறியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback