Breaking News

எந்த வெளிநாட்டில் இருந்தாலும் தமிழர்கள் டிரைவிங் லைசன்சை ஆன்லைன் வழியாக புதுப்பிப்பது எப்படி முழு விவரம் driving licence renewal online

அட்மின் மீடியா
0
ஆன்லைன் வழியாக வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களுடைய இந்திய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்:

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாடு ஓட்டுநர்கள் ஆன்லைன் வாயிலாக தங்களுடைய இந்திய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் 



இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

முதலில் அதிகாரப்பூர்வ https://sarathi.parivahan.gov.in என்ற இணையதளத்திற்க்கு செல்லவும்

அடுத்து உங்கள் விருப்பப்பட்ட மொழியினை தேர்வு செய்து அதன்பின்பு  உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு Services on Driving License (Renewal/Duplicate/AEDL/Others)” என்பதை கிளிக் செய்து அதில் Apply for DL Renewal” என்பதை தேர்வு செய்து உங்கள் டிரைவிங் லைசன்சஸ் விவரங்களை பதிவு செய்து Get DL Details” கிளிக் செய்யவும்.

அதன்பின்பு வரும் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து  RTO அலுவலகத்தை தேர்வு செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு “Confirm” என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும் 
  • மருத்துவ சான்று(Form 1A) (வயது 40க்கு மேல் இருந்தால்).
  • முகவரி சான்று(ஆதார், பாஸ்போர்ட் போன்றவை).
  • வயது சான்று(பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் போன்றவை).
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
அடுத்து ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் அதன்பின்பு Application Status மூலம் உங்கள் விண்ணப்ப நிலையைப் பார்க்கலாம்.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback