சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
அட்மின் மீடியா
0
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு
மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்கும், சாலை பள்ளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - சென்னை மெட்ரோ நிர்வாகம்
சென்னையின் மத்திய கைலாஷில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் முன் மாலை 5 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டு இந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த காரில் 4 பேர் பயணம் செய்த நிலையில் உயிர் சேதம் ஏதும் நடக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்து, பள்ளத்தில் கவிழ்ந்த காரை ஜேசிபி உதவி உடன் மீட்டுள்ளனர்.
தற்பொழுது அதிகாரிகள் இந்த பள்ளத்திற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் இன்று இரவுக்குள் பள்ளம் மூடப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவித்தனர்
சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தரமணி சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீர்செய்யப்படும் வேறு எங்கும் எந்த பாதிப்பு இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் அச்சப்பட தேவையில்லை என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்