கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? - அமைச்சர் சொன்ன பதில்!
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? - அமைச்சர் சொன்ன பதில்!
தமிழகத்தில் கடும் வெயில் காரணமாகபள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பத்தாம் வகுப்பில் மொத்தம் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.88 சதவீதம் மாணவிகளும், 91.74 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் கடும் வெயில் காரணமாகபள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். தற்போதைய நிலவரப்படி ஜூன் 2ஆம் தேதி திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்