Breaking News

லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து- ஒருவர் படுகாயம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பகுதியில் லேப்டாப் வெடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது வில்பட்டி என்ற கிராமத்தின் மையப்பகுதியில் மருந்து கடை வைத்திருப்பவர் ஜெயவீரன் (47), இந்நிலையில் நேற்று ஜெயவீரன் தன்னுடைய மருந்து கடையில் சார்ஜ் போட்டு இருந்த லேப்டாப்பை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது லேப்டாப் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் ஜெயவீரனின் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடனே வில்பட்டி கிராம மக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து ஜெயவீரனை காப்பாற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback