தமிழகம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவையில் பாதிப்பு - பயனர்கள் அவதி! Airtel
தமிழகம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவையில் பாதிப்பு - பயனர்கள் அவதி!
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மணி நேரமாக ஏர்டெல் நிறுவன சேவை பாதிப்பு
கடந்த இரண்டு மணி நேரமாக அழைப்புகள் மேற்கொள்ள முடியாமல் பொது மக்கள் பாதிப்பு
நான்கு மணி நேரத்திற்குள் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய குழு தகவல்.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இன்று இரவு 8 மணி முதலே ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தைக் குறிப்பிட்டு (டேக் செய்து) இணையத்தில் பயனர்கள் பலர், புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Tags: தொழில்நுட்பம்