ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்து தனி கட்சி தொடங்கிய கவுன்சிலர்கள் - அதிர்ச்சியில் கெஜ்ரிவால் aam aadmi party Indraprastha Vikas Party
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்து தனி கட்சி தொடங்கிய கவுன்சிலர்கள் முழு விவரம் aam aadmi party Indraprastha Vikas Party
பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி’ என்ற தனி அரசியல் கட்சியை டொடங்கியுள்ளனர். இந்த அணிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால், நாங்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்