பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபர், கல்லூரி மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது - முழு விவரம் இதோ.!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபர், கல்லூரி மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது முழு விவரம் இதோ.!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு முதுகலை படித்து வருபவர் தேவேந்திர சிங் தில்லான் (வயது 25). இவர் கைதால் பகுதியில் மே 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட தில்லானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்கு சென்றதும், அங்கு பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவரான நௌமான், ஹரியானாவில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கு தகவல்கள் கொடுப்பதற்காக தனது உறவினர் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் ஓட்டுநர் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் மூலம் முகவர்களிடமிருந்து அவர் பணம் பெற்றுள்ளார்.
அதேபோல் ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறி 33 வயதான யூடியூபர் ஜோதி ராணி என்பவரை ஹரியானா காவல்துறையினர் நேற்று (மே 16), கைது செய்தனர்.
2023 இல் விசிட்டர் விசாவைப் பெறுவதற்காக பாகிஸ்தான் தூதரகத்திற்கு அவர் சென்றதாக" கூறியதாக அறியப்படுகிறது. அப்போதுதான் அவர் புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்கிற டேனிஷுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவர், அந்த அதிகாரியின் தொலைபேசி எண்ணை போலீசாருக்கு வழங்கியதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்கள் இப்படி 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Tags: இந்திய செய்திகள்