Breaking News

தூத்துக்குடி அருகே சாலையோர 50 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய ஆம்னி வேன் - குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு - முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி அருகே சாலையோர கிணற்றில் மூழ்கிய ஆம்னி வேன் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு முழு விவரம்



தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் 8 பேர் குடும்பத்துடன் வந்துகொண்டு இருந்தனர் அபோது சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. 

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த 1) ஜெர்சோன் 2) ஜெஸிட்டா 3) ஷைனி கிருபாகரன் ஆகிய 3 பேர் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். 

தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. 

தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி 1) வசந்தா 2) மோசஸ் 3) ரவி கோவில் பிச்சை 4) கெஞ்சி அல்கிருபா 5) ஷாலினி ஆகிய 5 பேர் உடல்களை மீட்டனர்.

மீட்பு பணிகள் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1923787469105004659

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback