Breaking News

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம் , சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்படும் - கேரள அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம் , சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்படும் - கேரள அரசு அறிவிப்பு

2025-26 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என கேரள அரசு அறிவிப்பு!

இதற்கு பதிலாக மாணவர்கள் மத்தியில் சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது கேரள அரசு

இந்த இரண்டு வாரத்தில் போதைப்பொருள் பயன்பாடு, காவல்துறை, கலால் வரி, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சமூக நீதி, தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மாநில கல்வி ஆராய்ச்சி வன்முறை நடத்தையை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், உணர்ச்சி கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் சட்ட விழிப்புணர்வு உள்ளிட்ட தலைப்புகள் குறித்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்

நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback