Breaking News

தனியார் பள்ளிகளில் 25 இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை எப்போது ? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 % இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாகத் துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வியை உறுதி செய்கிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை இணையதளம் வழியாக ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் சார்பாக ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற  கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதை எற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback