ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? how to apply for patta online
இனி எங்கிருந்தும் எந்நேரமும் ஆன்லைனில் பட்டா பெற விண்ணப்பிக்கலாம்
முன்னதாக சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், பட்டாவை மாற்றம் செய்ய வாங்கப்பட்டு அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது அதனை எளிமைப்படுத்த புதியதாக தமிழ்நிலம் எனும் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தை இன்று தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
விண்ணப்பிக்க:-
https://tamilnilam.tn.gov.in/citizen/
தேவைப்படும் ஆவணங்கள்:-
ஆதார் அட்டை
சொத்து பத்திரம்
கைபேசி எண்
மின்னஞ்சல் முகவரி
விண்ணப்பிப்பது எப்படி:-
முதலில் மேல் உள்ள இனைப்பில் சென்று உங்கள் செல்போன் பதிவு செய்யுங்கள்
அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபியை பதிவு செய்து உள் நுழையுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பெயர் தந்தை பெயர், முகவரி, இமெயில், என பது செய்யுங்கள்
அடுத்து நீங்கள் வாங்கிய நிலம் பற்ரிய விவரம், பதிவு செய்த விவரம் பதிவிடுங்கள்
அடுத்து ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யுங்கள்
அடுத்து ஆன்லைனில் கட்டணம் கட்டவேண்டும் உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டி இருக்கும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும்.
அதன்பின்பு உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்
அதன்பின்பு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பின், பட்டா மாறுதல் செய்யப்படும்.
பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பட்டா உத்தரவின் நகல், பட்டா, ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள்:
1. பெயர் 2. கைபேசி எண் 3. முகவரி
யார் விண்ணப்பிக்கலாம் ?
பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதல் வகைகள் யாவை?
1. உட்பிரிவுள்ள இனங்கள் 2. உட்பிரிவு அல்லாத இனங்கள்
தேவைப்படும் ஆவணங்களின் விவரம் : (இணைப்பின் அளவு 3 MB க்கு மிகாமல் 1. கிரையப் பத்திரம் 2. செட்டில்மென்ட் பத்திரம் 3. பாகப்பிரிவினை பத்திரம் 4. தானப் பத்திரம் 5. பரிவர்தனை பத்திரம் 6.அக்குவிடுதலைப் பத்திரம்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி