நான் உயிரோடு தான் இருக்கிறேன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது வீடியோ இணைப்பு B.H.Abdul Hameed
பிரபல வர்ணனையாளர் அப்துல் ஹமீது உடல் நலம் குறித்து பரவும் தகவல் உண்மை இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் பொய்யான தகவலை யாரும் நம்பவேண்டாம் எனவும் அவரது உறவினர் விளக்கம் அளித்துள்ளார்
பி. எச். அப்துல் ஹமீட் (B. H. Abdul Hameed) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட, பன்னாட்டுப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
இந்நிலையில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் திடீரென காலமானதாக வதந்தி பரவிய நிலையில் இலங்கையில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்று அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது எனகவலையுடன் தெரிவித்துள்ளார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/JournoPG/status/1805450099931463824
Tags: FACT CHECK மறுப்பு செய்தி