Breaking News

கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் உதயம் ஆவதையும் பார்க்கலாம்

அட்மின் மீடியா
0
கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் உதயம் ஆவதையும்பார்க்கலாம்

 

ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில் கன்னியாகுமரியில் காணலாம் அற்புத காட்சியை உலகிலேயே கன்னியாகுமரியில் மட்டுமே காண முடியும். இந்த வானவியல் அபூர்வ நிகழ்வை காண சுற்றுலாப் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள்.

இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.   மாலையில் சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிறத்துடன் மறையும். 

அந்த சமயத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன்  எழும்பும்.அப்போது கடலின் மேல்பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்சென்று மின்னும். 

இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, கன்னியாகுமரி மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரையில் இருந்து பார்க்கலாம். இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன்குன்றத்தில் இருந்தும் அபூர்வ காட்சியை கண்டு ரசிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback