Breaking News

பெண்ணுக்கு தாய் வீட்டில் சீதனமாக வழங்கப்படும் சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை உச்ச நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

பெண்ணுக்கு தாய் வீட்டில் சீதனமாக வழங்கப்படும் சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை உச்ச நீதிமன்றம்

கேரளாவை சேர்ந்த ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2009ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அப்போது, பெற்றோரால் எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எனது கணவர் எடுத்து கொண்டார். அதை திருப்பி தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘மனைவி சீதனமாக எடுத்து வரும் சொத்து, கணவரின் சொத்தாக மாறாது. அதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மாறாக, அவசர தேவைக்கு அந்த சொத்தை அவர் பயன்படுத்தியிருந்தால், அதை திருப்பி தர வேண்டியது கணவரின் தார்மீக கடமை. இந்த வழக்கில், பெண்ணின் நகைகளை பயன்படுத்திய கணவர், அதற்கு ஈடாக ரூ.25 லட்சம் மனைவிக்கு வழங்க வேண்டும்’ என தீர்ப்பளித்துள்ளனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback