Breaking News

ஊட்டியில் நடைபெறும் கோடை விழா - போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஊட்டியில் நடைபெறும் கோடை விழா - போக்குவரத்து மாற்றம் முழு விவரம்


நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடை விழாவினை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி போக்குவரத்தில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டள்ளன. இதற்கு உள்ளுர் பொது மக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. கூடலூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்.பி.எப். கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டு அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

2. மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக உதகை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் தலைகுந்தாமட்டம் கோழிப்பண்னை புதுமந்து வழியாக ஸ்டிபன்சர்ச் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்திலிருந்து வண்டிசோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்

3. கூடலூரிலிருந்து உதகை படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர் போஸ்டிலிருந்து வலது புறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.

4. குன்னூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

5. கோத்தகிரியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு குன்னூர் வழியாக உதகை வந்தடையலாம்.

6. அத்தியாவசிய வாகங்கள் தவிர (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும் 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை காலை 0600 மணி முதல் இரவு 0800 மணி வரை உதகை நகருக்குள் அனுமதி இல்லை.

7.மேட்டுப்பாளயத்திலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை அனுமதிக்கப்படும்.

8. உதகை மார்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருந்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தை அவர்களது கடை எதிரே நிறுத்தக் கூடாது. அதற்கு பதிலாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback