Breaking News

மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது..?

அட்மின் மீடியா
0

மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது..?

கடந்த ஆண்டை போல கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகின்றது

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது

ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பள்ளிக் கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். கட்டாயம் வர வேண்டும் என்று அழுத்தம் தரக் கூடாது. இந்த உத்தரவை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும். தவறினால் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback