Breaking News

உ.பி: பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய 4 மாணவர்களுக்கு மதிப்பெண் - பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

அட்மின் மீடியா
0

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.இதில், நன்றாக படிக்கும் மாணவர்களை விட 4 மாணவர்களுக்கு 50 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

இதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இதுகுறித்து அப்பல்கலைகழக  முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி பார்க்கப்பட்டபோது 4 மாணவர்களும் தேர்வில் கேட்கப்பட்ட விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வார்த்தைகளை எழுதி பக்கங்களை நிரப்பியுள்ளது தெரியவந்தது. 'பார்மசி ஒரு தொழில்' என்ற கட்டுரையின் நடுவில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதே கட்டுரையில், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்களின் பெயர்களும் எழுதப்பட்டு உள்ளன.

இதற்கு விசாரணை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங் உத்தரப்பிரதேச ஆளுநர், பிரதமர், முதல்வர், பல்கலை துணைவேந்தர் என அனைவருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி உடனடியாக கவர்னர் அலுவலகம் துணைவேந்தருக்கு உத்தரவிட்டிருந்தது பின்னர், ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவின் படி பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.இதில் இரண்டு பேராசிரியர்கள் லஞ்சமாக பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.

அந்த வகையில் அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகிய 2 பேராசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் வந்தனா சிங், “மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தனது அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபிறகு, அவர்கள்மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback