சுய தொழில் :- மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி 3 நாட்கள் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் Bridal Makeup Training
மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி 3 நாட்கள் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் Bridal Makeup Training
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் "மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி"
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி வரும் 26.03.2024 முதல் 28.03.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மேக்கப், மணப்பெண் ஒப்பனை, ஸ்கின் கேர், ப்ரைம் தி ஃபேஸ், கலர் கரெக்ஷன், ஃபவுண்டேஷனைப் பயன்படுத்துதல், ஹைலைட் செய்தல், தூள். புருவங்கள் மற்றும் கண் மேக்கப், . காண்டூர் மற்றும் ப்ளஷ், செட்டிங் ஸ்ப்ரே, ஃபைனல் டச்ஸ், சிகை அலங்காரம். சேலை கட்டும் விதங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிப்பார்கள்
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் (மகளிர் மட்டும்) குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032 8668102600/8668100181/7010143022/9841336033
முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
Tags: தொழில் வாய்ப்பு