இமாச்சல் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி | சைதை துரைசாமியின் மகனை காணவில்லை முழுவிவரம் Saidai Duraisamy son Vetri Duraisamy
இமாச்சலத்தில் கார் விபத்து டிரைவர் பலி சைதை துரைசாமியின் மகனை காணவில்லை முழுவிவரம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மகன் சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது இதில் கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மேலும் வெற்றி துரைசாமியின் நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார், இந்த விபத்தில் அதில் உடன் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஆனது நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானது
இதில் கார் ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது.
சைதை சா. துரைசாமி அதிமுக கட்சியை சேர்ந்த அரசியல்வாதியாவார். மேலும் தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும் தலைவருமாக உள்ளார்.
இந்த அமைப்பு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. 2011ஆம் ஆண்டின் உள்ளாட்சி தேர்தல்களில் சென்னை மாநகராட்சி முதல் அதிமுக மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்