தமிழ் வழிச் சான்றிதழ் புதிய அரசாணை வெளியீடு pstm certificate government order
பொதுப் பணிகள் 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் மூடப்பட்டகல்லூரிகள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
1 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம்.
2 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் திருத்தச் சட்டம்.
3. அரசாணை (நிலை) எண்.82, மனித வள மேலாண்மை 16.08.2021
ஆணை:
மேலே ஒன்றில் படிக்கப்பட்ட சட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களில், இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.
2 மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் திருத்தச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட பதவிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில், நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்ற வகையில் உரியதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரையறுக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்திருத்தத்தில் பின்வருமாறு
(i) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது 10-ஆம் வகுப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:
(ii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது மேல்நிலை வகுப்பாக (12-ஆம் வகுப்பு) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பினை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:
(iii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டயப் படிப்பாக (Diploma) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்: அல்லது.
மேல்நிலை வகுப்பிற்குப் பின் பட்டயப் படிப்பினை முடித்திருந்தால், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:
(iv) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
(v) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது முதுகலைப் பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
3. இந்நிலையில், மேற்படி சட்டங்களை செயல்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட && (W.P(MD) No.8025, 2020), 22.03.2021 διότι φmu ú, 2010-0 ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவை சட்டப்படி செல்லத்தக்கவையாகும் எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.
4. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய மேற்படி தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தினை
பெற்று அரசு விரிவாக ஆய்வு செய்து, அதன்படி, 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில்கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அரசாணை (நிலை) எண்.82 மனிதவள மேலாண்மைத் துறை, நாள் 16.08.2021-ல் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் மற்றவற்றுக்கிடையே பத்தி 4 (vii)-ல் பின்வரும் வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டுள்ளது:.
(vii) பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / உரிய அலுவலரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்
5. இந்நிலையில், கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில் ஏற்கனவே அக்கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் யாரிடம் தமிழ்வழிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற பொருண்மை மீது அரசு கவனமாக ஆய்வு செய்து, மேலே மூன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் தொடர்ச்சியாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது:-
"உயர்கல்வித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லூரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை இவ்வாணையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பெற்று, தேர்வர்கள் உரிய அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்
தமிழ் வழி சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..
https://www.adminmedia.in/2022/10/how-to-apply-pstm-certificate-online.html
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்