பொங்கல் பரிசு தொகுப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையில்
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன.
தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரொக்கத் தொகை ரூ.1000/-வழங்க நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன.
4. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 09.01.2024 நாளிட்ட அறிவிப்பிற்கிணங்க, 2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1000/- சேர்த்து வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
5. மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட கீழ்க்கண்டவாறு ஆணை வெளியிடப்படுகிறது. i. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் (219.51,748) மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு (19,365) ஆக மொத்தம் 2,19,71113 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ. 1000/- சேர்த்து வழங்கப்படும்: இதனால் அரசுக்கு ரூ. 2436,18,77,690/- (ரூபாய் இரண்டாயிரத்து நானூற்று முப்பத்து ஆறு கோடியே, பதினெட்டு இலட்சத்து, எழுபத்து ஏழாயிரத்து அறுநூற்று தொண்ணூறு மட்டும்) செலவினம் ஏற்படும். மேலும், பார்வை ஒன்றில் கண்ட அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.238,9272,741/- (ரூபாய் இருநூற்று முப்பத்து எட்டு கோடியே, தொண்ணூற்று இரண்டு இலட்சத்து, எழுபத்து இரண்டாயிரத்து, எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) மற்றும் பார்வையில் மூன்றில் கண்ட அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1828,05,98,062/- (ரூபாய் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு கோடியே. ஐந்து இலட்சத்து, தொண்ணூற்று எட்டாயிரத்து. அறுபத்து இரண்டு மட்டும்) ஆக மொத்தம் ரூ.2066,98,70,803 வழங்கப்பட்ட தொகையில் மீதித் தொகை ரூ.369,20,06,887/ க்கான நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது: iii. இந்த செலவினம் 2023-24 வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும்.
6. மேலே பத்தி 5இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும்- 345600 நுகர்பொருள் வழங்கல் 103 நுகர்வோர் உதவித் தொகைகள் மாநிலச் செலவினங்கள் AE பொது விநியோக முறை உதவியுடன் சமூகப் பாதுகாப்பு உணவு உத்திரவாதம் 311 மானியங்கள் 02 பொதுவான மானியம் (IFHRMS (3456-00-103-AE-31102)
7. மேலே பத்தி 5இல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பின்வரும் வைப்பீட்டு கணக்கின்கீழ் வரவு வைப்பதற்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட நடைமுறையின்படி சரிகட்டும் பட்டி தயாரிப்பதற்கு முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் அளிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை, சென்னை-5 அவர்களுக்கு அதிகாரம் K (b) வைப்பீடுகளும் முன் பணங்களும் வட்டி பெறாத வைப்பீடுகள் உரிமையியல் வைப்பீடுகள் 8443.00 800 ஏனைய வைப்பீடுகள் BJ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வைப்பீடுகள் 801 02 வரவுகள் வட்டி பெறாதவை (IFHRMS DP Code 844300 800 BJ 801 02)
8. மேலே பத்தி 5இல் ஒப்பளிக்கப்படும் தொகையினை மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக செலவிட அதிகாரம் அளிக்கப்படுகிறது. 9. இவ்வாணை நிதித்துறையின் அசா.கு.எண் 85.நிதி(கூஉ (ம)நுபா)த் துறை/2024, நாள் 09.01.2024 இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்