தெலங்கானாவின் முதல்வராக பதவியேற்கின்றார் Revanth Reddy
தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கின்றார் யார் இந்த Revanth Reddy
2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று முதல்வரானார். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் டிஆர்எஸ் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 இடங்களிலும் தெலுங்கு தேசம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்ற்ய் ஆட்சியை தக்கவைத்தது அப்போது காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் ஏஐசிசி பொறுப்பாளர் மாணிக் ராவ் தாக்ரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 64 எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசையிடம் நேற்று கடிதம் வழங்கினர்.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் கூட்டம் நடத்தி சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன் பிறகு முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார்.
ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பட்டி விக்ரமார்கா, சபீர் அலி, அமைச்சர்களாக அனுசுயா, விவேகானந்தா, சுதர்சன் ரெட்டி, ஸ்ரீதர்பாபு, ஜக்கா ரெட்டி, அனுமந்தராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்kஅ உள்ளார்கள்.
யார் இந்த ரேவந்த் ரெட்டி:-
ரேவந்த் ரெட்டி 2008 முதல் 2017 வரை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார்.
2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திர சட்டப்பேரவையில் கோடங்கல் தொகுதி எம்எல்ஏவாக 2009-14, 2014-18 ஆண்டுகளில் என இரண்டு முறை இருந்துள்ளார்.
அக்டோபர் 17, 2017 அன்று, அவர் தெலுங்கு தேச உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இ
2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்
2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டது முதலே சந்திரசேகர் ராவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.சந்திரசேகர் ராவ் ஆட்சியில் உள்ள பிரச்னைகளை மக்களிடம் பல்வேறு வழிகளில் நேரடியாக கொண்டு சேர்த்து, பல்வேறு பேரணி, பொதுக்கூட்டங்களின் மூலமாகவும் பிரசாரம் செய்தார்.
காங்கிரஸ் எம்.பி. யான ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவில் காமாரெட்டி, கோடங்கல் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.அதில், கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் காமாரெட்டி தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்