சென்னையில் கனமழை பெய்துவருவதால் தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ரத்து பட்டியல் இணைப்பு
சென்னையில் கனமழை பெய்துவருவதால் தென்மாவட்டங்கள் இதனை தொடர்ந்து, மைசூரு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி, பெங்களூர் ஏசி டபுள் டக்கர். பெங்களூரு பிருந்தாவன், திருப்பதி சப்தகிரி ஆகிய விரைவு ரயில்களும் இன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), ரயில் இன்று ரத்து.
மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638),ரயில் இன்று ரத்து.
செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), ரயில் இன்று ரத்து.
நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), ரயில் இன்று ரத்து.
கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), ரயில் இன்று ரத்து.
கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634), ரயில் இன்று ரத்து.
செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684),ரயில் இன்று ரத்து.
திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), ரயில் இன்று ரத்து.
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), ரயில் இன்று ரத்து.
ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (22662), ரயில் இன்று ரத்து.
ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16752), ரயில் இன்று ரத்து.
மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651), ரயில் இன்று ரத்து.
திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606), ரயில் இன்று ரத்து.
குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ரயில் இன்று ரத்து.
மேட்டுப்பாளையம் நீலகிரி(12671) விரைவு ரயில்,
கோவை சேரன்(12673) விரைவு ரயில்,
போடிநாயக்கனூர்(20601) விரைவு ரயில்,
ஆலப்புலா(22639) விரைவு ரயில்,
மைசூரு காவேரி(16021) விரைவு ரயில்,
திருவனந்தபுரம்(12623) அதிவிரைவு ரயில்,
பெங்களூரு(12657) விரைவு ரயில்,
ஈரோடு ஏற்காடு(22649) விரைவு ரயில்,
பாலக்காடு(22651) விரைவு ரயில்,
பெங்களூரு(12027) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் இன்று ரத்து.
நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் எஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து வந்தே பாரத் புறப்படும்.
சென்னையில் இன்று முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்படாது.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூர் வரும் ரயில்கள் ரத்து.
மங்களூரு, சேலம், திருச்சி, தஞ்சை, நாகர்கோவில், காரைக்கால், மதுரையில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து.
குருவாயூரில் இருந்து எழும்பூர் புறப்பட்ட ரயில் விழுப்புரத்தில் நிறுத்தம்.
மேலும் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள:-
https://twitter.com/GMSRailway?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
Tags: தமிழக செய்திகள்